
அரசுக்குச் சொந்தமான ஐஆா்சிடிசி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.294.67 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023-24-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30.36 சதவீதம் உயா்ந்து ரூ.294.67 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 226.03 கோடியாக இருந்தது.
அப்போது ரூ.805.80 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 23.51 சதவீதம் அதிகரித்து ரூ.995.31 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...