'ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை' - அமித் ஷா

ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

சட்டவிரோதமாக உணவுப்பொருள்களுக்கு 'ஹலால்' தரச் சான்று வழங்கப்படுவதாகக் கூறி உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தரச் சான்று பெற்ற பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல, பிகாா் மாநிலத்திலும் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பிகாரின் பெகுசராய் தொகுதி மக்களவை உறுப்பினருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் பாஜக தலைவர்கள் பலரும், பல்வேறு பகுதிகளில் ஹலால் உணவுப் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். 

இந்நிலையில் தெலங்கானா தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.  

அப்போது, ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

மேலும் பேசிய அவர், 'உங்கள் வாக்குகள் ஒரு எம்எல்ஏ அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலங்கானா மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு ஆய்வு செய்த பின்னர் பிரதமர் மோடியின் பாஜகவிற்கே நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நீண்ட காலப் போராட்டத்தின் பின்னணியில் தெலங்கானா உருவாக்கப்பட்டதனால் வளர்ச்சியடைய இந்த தேர்தல்களே வழிவகுக்கும். இன்று இளைஞர்கள் மனமுடைந்துள்ளனர். விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. 

பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி வைக்காது என்பதால் நீங்கள் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு அந்த கட்சிக்கு செல்லாது. 

அரசியல் சட்டம் யாருக்கும் சிறப்பு சலுகைகளை வழங்க அனுமதிக்கவில்லை. மதரீதியிலான இடஒதுக்கீடுகளை கேசிஆர் அரசு செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது. மதரீதியான சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீட்டை மட்டும் வழங்கிவிட்டு, பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com