தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஹைதராபாத்தின் பெயர் மாற்றப்படும்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயரை பாக்யங்கர் என்று மாற்றப்படும் என்று கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image

கிஷன் ரெட்டி

Updated On :27 நவம்பர் 2023, 11:22 am

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயரை பாக்யங்கர் என்று மாற்றப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், தெலங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, மாநிலத்தில் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் 'பாக்யநகர்' என்று பெயர் மாற்றப்படும் என்று திங்கள்கிழமை தெரிவித்தார்.

மெட்ராஸ், பம்பாய், கல்கட்டா போன்ற நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

"ஹைதர் யார் என்று கேட்கிறேன். ஹைதர் என்ற பெயர் தேவையா? ஹைதர் எங்கிருந்து வந்தார்? ஹைதர் யாருக்காக வேண்டும் என்று கேட்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் என்ற பெயரை நீக்கிவிட்டு, பாக்யநகர் என்ற பெயரை மாற்றுவோம்'' என்றார்.

"ஏன் பெயரை மாற்றக் கூடாது. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று பாஜக மாற்றவில்லை, திமுகதான் மாற்றியது.

மெட்ராஸை சென்னை என்றும், பம்பாய்க்கு மும்பை என்றும், கல்கத்தாவை கொல்கத்தா என்றும் மாற்றியுள்ளனர். அதேபோல் ஹைதராபாத் என்ற பெயரை பாக்யநகர் என்று மாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது.

பெயர்களை மாற்றுவது குறித்து புத்திசாலிகளின் ஆலோசனையையும் பாஜக ஏற்கும் என்றும், பாக்யநகர் என்றால் அதிருஷ்ட நகரம் என்று பொருள்" என்றும்  அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.