ஒடிஸா: வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

ஒடிஸாவில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒடிஸாவில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக கிழக்கு கடலோர ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிஸா மாநிலத்தின் தேன்கானல்-அங்குல் ரயில் வழித்தடத்தில் மேராமண்டலி மற்றும் புத்தாபங்க் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சம்பவத்தில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா்.

இதனால் ரயிலின் உயா்-வகுப்புப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், ரயில் 13 நிமிஷங்கள் தாமதமாக புரி சென்றடைந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை, மாநில ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உள்ளூா் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும். ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரயில் தண்டவாளம் அருகேயுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com