ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பும்...

நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதற்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களும், பல்வேறு ஆய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன.

Published On :


நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதற்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களும், பல்வேறு ஆய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. அது தொடர்பான ஒரு பார்வை...

  • நாடு முழுவதும் 113 கோடி கைப்பேசிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
  • நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
  • அறிதிறன்பேசி வைத்திருப்போர் ஒரு நாளுக்கு சராசரியாக 2 மணி நேரம் 15 நிமிஷம் செயலிகளில் செலவிடுவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அறிதிறன்பேசியை 45 சதவீதம் பேர் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர்.
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது 76.8 சதவீதம் அதிகரிப்பு.
  • சைபர் குற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் புகார்களை பொதுமக்கள் அளித்துள்ளனர் என மத்திய  குடிமக்கள் நிதி, சைபர் மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
  • சைபர் குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் 350 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
  • மோசடி அழைப்புகளும், மோசடி குறுஞ்செய்திகளும் ஆண்டுக்கு 18 சதவீதம் வரையில் அதிகரிக்கிறது.
  • ஒருவரது கைப்பேசி எண்ணுக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 61 மோசடி அல்லது தேவையற்ற அழைப்புகள் வருகின்றன. 
  • புதுதில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, 
  • அறிதிறன்பேசி மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரிக்கின்றன.
  • 59 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரையிலான வழக்குகளின் விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் சைபர் குற்றங்களில் தொடர்புடைய 19,654 கைப்பேசி எண்கள் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
  • 17 சதவீதத்தில் இருந்து 31% வரையிலான வழக்குகள், தடயங்கள் கிடைக்கவிலலை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, துப்புதுலக்க முடியவில்லை என முடித்து வைக்கப்படுகிறது.
  • 4 சதவீத்தில் இருந்து 10% வரையிலான வழக்குகளிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
  • யுபிஐ பணப் பரிவர்த்தனையில் மட்டும் மாதந்தோறும் ரூ.200 கோடி அளவில் மோசடிகள் நடைபெறுகின்றன.
  • நாட்டில் 46.7 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
  • சைபர் குற்றங்களால் ஒரு நாளுக்கு மக்கள் பணம் ரூ.100 கோடி பறிபோவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • கணினி, கைப்பேசி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக 35 வகையான சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன.
  • ஒரு சதவீதத்துக்கு குறைவான சைபர் குற்ற வழக்குகளிலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.