இயந்திரங்களை வென்ற மனித உழைப்பு!

உத்தரகண்ட் மீட்புப் பணி நமக்கு உணர்த்தியுள்ள செய்தி என்பது இயந்திரங்களைத் தாண்டிய மனித உழைப்பு இல்லையெனில் இது சாத்தியமாகி இருக்காது.
உத்தரகண்ட் முதல்வர், எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்த போது...
உத்தரகண்ட் முதல்வர், எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்த போது...

‘இயந்திரத்தை வென்ற மனித உழைப்பு’ - சர்வதேச ஊடகங்கள் உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை இந்த வார்த்தைகளால்தான் விவரித்துள்ளன. 

உத்தரகண்ட் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் கடந்த நவ. 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

மீட்புப் பணி 17 நாளாகத் தொடர்ந்து வந்த நிலையில், இறுதி 10 முதல் 12 மீட்டா் மண் மற்றும் இடிபாடுகளை அகற்ற, ‘எலிவளை சுரங்க முறை’ - சுரங்கத் தொழில் பணியாளா்கள் குழு நேரடியாகத் துளையிட்டு குழாயைச் செலுத்தத் திட்டமிடப்பட்டது.

“முடிவில் இந்த வெற்றி, இயந்திரங்களைத் தாண்டி மனித உழைப்புக்குக் கிடைத்த ஒன்று. நிபுணத்துவம் பெற்ற எலி-வளை சுரங்கத் தொழில் பணியாளர்களாலேயே 12 மீட்டர் தொலைவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு நடந்துள்ளது” என கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

சுரங்கத்தில் இருந்து முதல் மனிதர் மீட்கப்பட்டவுடன் வெளியில் கொண்டாட்டங்கள் தொடங்கின.

எல்லாவற்றையும் கடந்து இந்த மீட்பு சாத்தியமானதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்புதான் என்பதையே கூற வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com