தெலங்கானாவில் முதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகம்!

தெலங்கானாவில் முதன்முறையாக ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தெலங்கானாவில் முதன்முறையாக ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 

தெலங்கானா சட்டப்பேரவைக்கு நாளை(நவ. 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தெலங்கானாவில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெண் வாக்காளர்கள் 1,63,01,705 பேர். ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2,676 பேர். 

இதையடுத்து முதல்முறையாக இந்த தேர்தலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இலவச மின்சாரம், வேலைவாய்ப்பு என கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com