வெளிப்படையான, நட்பு அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர்: கார்கே

பின்தங்கியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வெளிப்படையான மற்றும் நட்பு அரசைத் தேர்வு செய்ய தெலங்கானா மக்கள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 
Telangana people have decided to choose transparent, people-friendly govt: Cong chief .
Telangana people have decided to choose transparent, people-friendly govt: Cong chief .

பின்தங்கியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வெளிப்படையான மற்றும் நட்பு அரசைத் தேர்வு செய்ய தெலங்கானா மக்கள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. தெலுங்கானா சட்டப் பேரவையின் 119 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்த நிலையில் கார்கே தனது எக்ஸ் பதிவில், 

தெலங்கானா மக்கள் பின்தங்கியவர்களுக்கு பாதுகாப்பு வலையுடன் வெளிப்படையான, நட்பு அரசாங்கத்தைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் எண்ணற்ற கனவுகள் மற்றும் ஆசைகளை நனவாக்க வேண்டிய நேரம் இது. அதற்காக பல ஆண்டுகளாக உங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்திவிட்டீர்கள். 

மாற்றம், சமூக நீதிக்கான இந்த ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க மாநிலத்தின் முதல் முறையாக வாக்களிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார். 

தெலங்கானாவின் சகோதர சகோதரிகள் அதிகளவில் வாக்களியுங்கள்! 'பங்காரு' தெலங்கானாவை உருவாக்க வாக்களியுங்கள், காங்கிரசுக்கு வாக்களியுங்கள்' என எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் தெலங்கானா மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள 35,655 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com