போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்: ராகுல் காந்தி

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 நவம்பர் 2023, 5:36 am

DIN

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரியுள்ளார். 

முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பிரபுக்களை மக்கள் வெல்லப்போகிறார்கள்.

என் தெலங்கானா சகோதர சகோதரிகளே! திரளாக வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்.

தங்கத்தினாலான தெலங்கானா கட்டமைப்புக்கு வாக்களியுங்கள்! காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.