ஒடிசாவின் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒடிசாவின் 7 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 2) மற்றும் நாளை மறுதினம் (அக்டோபர் 3) மழையின் தீவிரம் அதிகரிக்கக் கூடும். மீனவர்கள் யாரும் நாளை (அக்டோபர் 2) வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் குர்தா மாவட்டம் அதிகபட்சமாக 138 மி.மீ மழையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.