ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென் மேற்கு ஜார்க்கண்ட் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் மீது நிலவுகிறது. நாளை (அக்டோபர் 3) காலை வரை ஜர்சுகுடா, பார்கார், சம்பல்பூர், சோன்பூர், தியோகர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்!
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சராசரியாக 16 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக 4 இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக மழைப் பதிவாகியுள்ளது.
மாநிலத்தில் அதிகப்படியாக பதாம்பூரில் 114 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.