பொற்கோயிலில் 2-வது நாளாக சேவையாற்றிய ராகுல் காந்தி!

பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாடு செய்தார்.
பொற்கோயிலில் 2-வது நாளாக சேவையாற்றிய ராகுல் காந்தி
பொற்கோயிலில் 2-வது நாளாக சேவையாற்றிய ராகுல் காந்தி

அமிருதசரஸ்: பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாடு செய்தார்.

பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மாநிலத்தின் காங்கிரஸ் தலைவா்கள் சிலா் ஆம் ஆத்மியுடன் மக்களவைத் தோ்தலில் கூட்டணியைத் தொடர வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com