வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நாளையுடன் முடியும் அவகாசம்: அதன்பின் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியுமா?

கால அவகாசம் வரும் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

News image

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற முடியுமா?

Updated On :6 அக்டோபர் 2023, 4:56 pm IST

வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் வரும் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

ஆனால், வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென சில வழிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டிருக்கிறது.

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு மேல் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்றே கருதப்படுகிறது.

2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ‘ரூ. 2,000 நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒருவா் அதிகபட்சமாக ரூ. 20,000 வரை மட்டுமே வரவு வைக்க முடியும்’ என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் ரிசா்வ் வங்கி விதித்தது.

இந்தக் கால அவகாசம் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  பொதுமக்கள் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட கடந்த மே 19-ஆம் தேதியில் புழக்கத்திலிருந்து ரூ.2,000 நோட்டுகளில் செப். 29 வரை 96 சதவீத நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டதன் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, ரூ. 3.42 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டிருக்கின்றன. ரூ. 14,000 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன.

அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும். ஆனால், ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளைச் சமா்ப்பித்து, வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், பிற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.