சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

News image

ஒடிசா ரயில் விபத்து

Updated On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

பாலசோா் மாவட்டத்தில் பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து ஜூன் 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 291 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ரயில் விபத்தில் பயணித்த 28 பேரின் உடல்களை அடையாளம் காணப்படாத நிலையில், சடலங்கள் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில், ரயில் விபத்து சம்பவம் நடைபெற்று 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உறவினர்கள் யாரும் உயிரிழந்தவர்களைத் தேடி வராததால் இவர்களது உடல்களை அடக்கம் செய்ய புவனேசுவரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 

அதன்படி, 28 பேரின் உடல்களையும் மாநகராட்சியின் உதவி சுகாதார அலுவலரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்பின்னர் உடல்கள் அனைத்தும் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.