திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் காவல் அக்.27 வரை நீட்டிப்பு!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் அக்.27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

News image
Updated On :13 அக்டோபர் 2023, 10:25 am

DIN

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் அக்.27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் அக்டோபர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். 

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சஞ்சய் சிங் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பின்னர், கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு மேலும் மூன்று நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், மேலும் 14 நாள்கள்(அக்.27) அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.