12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 13 -  19 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 13 -  19 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் உற்சாகம் கூடும். விருந்தினர்கள் இல்லம் தேடி வருவார்கள். தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். பணவரவுகளைப் பக்குவமாகக் கையாளுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புத்திசாலித்தனத்தால் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தி அடையும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்  பிறருக்கு உதவி செய்வார்கள். கலைத் துறையினர் சுலபமாக வெற்றி பெறுவார்கள். பெண்கள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் குழப்பத்திலிருந்து விடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - அக். 18, 19.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சொத்துகளை வாங்க முயற்சிப்பீர்கள். புதிய பொருள்களை உற்பத்தி செய்வீர்கள்.  வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்துடன் விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் நட்பைத் தக்க வைத்துகொள்வீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம்.  விவசாயிகள் கறுப்பு நிறப் பயிர்களால் லாபம் அடைவார்கள்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை எதிர்கொள்வார்கள். கலைத் துறையினர் பிறரிடம் அன்புடன் நடப்பீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தாய்க்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். வியாபாரிகளுக்கு இருந்த எதிர்ப்பு விலகும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் உயரத் தொடங்கும்.  அரசியல்வாதிகள் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்வார்கள்.

கலைத் துறையினர் தெளிவுடன் காரியங்களை மேற்கொள்வார்கள். பெண்கள் கோயில் திருப்பணிக்குச் செலவழிப்பார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தர்மச் சிந்தனைகள் உண்டாகும். பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.  தர்மசங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பீர்கள்.  எந்த விஷயத்திலும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் புதிய நுணுக்கங்களைக் கற்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பார்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் வீண்பேச்சுகளைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உடனுக்குடன் முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் குன்றியோருக்கு மருத்துவ உதவிகளைச் செய்வீர்கள். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல நண்பர்கள் துணைபுரிவார்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை முடிப்பார்கள்.

அரசியல்வாதிகளின் புகழ் உயரும். கலைத் துறையினர் வாழ்க்கை இலக்குகளை எட்டுவார்கள்.

பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் நண்பர்களுடன் ஆலோசிப்பார்கள்.

சந்திராஷ்டமம்  - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உழைப்புக்கு இரட்டிப்புப் பலன் கிடைக்கும். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். குழந்தைகளைத் திருத்துவீர்கள். உபரி வருவாயை சரியாக முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரிகள் புது யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.

விவசாயிகள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். கலைத் துறையினருக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள் உண்மையானவர்களைக் கண்டறிவார்கள். மாணவர்கள் பிறரை அனுசரித்து நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளைப் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரிகள் புதிய வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். விவசாயிகள் பிறரிடம் அனுசரித்து நடப்பீர்கள். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் நல்ல பாடம் கற்பீர்கள்.

கலைத் துறையினர் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகுவீர்கள். பெண்களின் நிர்வாகத் திறனை குடும்பத்தினர் பாராட்டுவார்கள்.

மாணவர்கள் ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் முன்னேற்றம் உண்டு.  பிறருக்கு பண உதவிகளைச் செய்வீர்கள். பணம் கைக்கு வர தாமதமாகும். அரசு அலுவலர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரிக்கும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கலில் சாதகமான சூழல் நிலவும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத் துறையினருக்கு பண வரவு இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)


தவறான வழிகாட்டுதலை ஏற்க மாட்டீர்கள். பிறருக்கு  உதவுவீர்கள். தொழிலை மேம்படுத்தும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் சுபிட்சம் உண்டாகும். கலைத் துறையினர் சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். மாணவர்களின் திறமை பளிச்சிடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். குழந்தைகளை கண்காணிப்பீர்கள். மனப் பயம் விலகும். அனைவரையும் மதித்து நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். விவசாயிகள் உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்கள் புதிய வீடு வாங்கத் திட்டமிடுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கடின சூழலில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். பெற்றோரிடம் அனுசரித்து நடப்பீர்கள்.   உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு வருமானம் சீராகவே இருக்கும். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் பிறரிடம் சுமுக உறவை மேற்கொள்வீர்கள்.

கலைத் துறையினர் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.  பெண்கள் புனிதத் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 13, 14.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.  கடன்கள் வசூலாகும். புதிய கடன்களை யாருக்கும் தர வேண்டாம். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் நிதானமாக காரியங்களைச் சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பெரியோரின் அறிவுரைகளை கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 15, 16, 17.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com