ஈரானுடனான போரில் உதவுவதற்கு நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளருடன் டிரம்ப் பேசுகையில், "நாங்கள் ஈரானை கடுமையாகத் தாக்கி வருகிறோம். அவர்களுக்கு இதைவிட கடும் பாதிப்பு ஏற்படுத்த முடியுமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. இவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள்; கொலையாளிகள்; மிருகங்கள்.
ஆனால், அது எனக்கு ஆச்சரியமொன்றும் இல்லை. போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் 3 பேரை கொன்றனர்.
ஐரோப்பா, ஜப்பான், சீனா, கொரியா உள்பட மற்ற நாடுகளும் இதில் உதவ வேண்டும்.
நேட்டோ மிகத் தொலைவுக்குச் சென்று விட்டது. ஆனால், அவர்கள் தங்களுக்கான ஆற்றலின் (எரிசக்தி) பெரும்பகுதியை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பெறுகின்றனர். அவர்கள் எதுவும் செய்யாமலிருப்பது குறித்து செனட்டர்களும் காங்கிரஸாரும் வருத்தத்தில் உள்ளனர். இது ஒரு ராணுவ சூழ்ச்சியே. இது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்.
நேட்டோவால் எங்களுக்கு உதவ முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அவர்களுக்கு தைரியம் இல்லை.
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்; ஆனால், போர்நிறுத்தம் செய்ய விரும்பவில்லை. நீங்கள் அழிக்க விரும்புகையில், போர்நிறுத்தம் செய்ய மாட்டீர்கள். ஆகையால், நாங்களும் செய்ய விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
Summary
NATO Has Done Nothing On Hormuz, says US President Donald Trump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது: டொனால்ட் டிரம்ப்
ஈரான் போரில் ஒத்துழைக்காத ஸ்பெயினுடன் வா்த்தகம் நிறுத்தம்: டிரம்ப்
முற்றிலும் அவசியம்! - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு நேட்டோ ஆதரவு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



