அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து, மாநிலத்தை அழித்து விடும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "அதிமுகவை பொருத்தவரையில், அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையேயான தேர்தல் என்று முதல்வர் சொல்வது சரியே. ஏனென்றால், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுக கூட்டணி என்கிறார்.
பாஜகவினர், ஏதோவொரு விதமாக தமிழகத்தின் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தால், நம்முடைய மொழி, இனம், வரலாறு, பாரம்பரியம், அறிவியல்சார்ந்த சிந்தனைகள், எதிர்கால வளர்ச்சி என அனைத்திலும் ஒரு மோசமான பேரழிவை எதிர்கொள்ள நேரிடும்.
அவர்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சாமி என்று சொல்லும் ஒரு கோஷ்டி மட்டும்தான். அவர்கள் தில்லியிலிருந்துதான் தமிழ்நாட்டைப் பார்ப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பார்க்க மாட்டார்கள். அதனால்தான், இது தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான தேர்தல்.
பாஜகவின் வரலாறு என்னவென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியை கபளீகரம் செய்வதுடன், மாநிலத்தையும் அழித்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் இந்தளவுக்கு அதிமுகவை முழுவதுமாக பாஜக கைப்பற்றிய சூழல் எப்போதும் இருந்ததில்லை. இது தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் தீர்மானிக்கக் கூடிய தேர்தல்.
விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடக்கியிருக்கிறார். அவர் ஒரு பிரபலமான நடிகரும்கூட. ஒருசில இளைஞர்களிடையே அவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் கிடைக்கும். ஆனால், இந்தியா கூட்டணிதான் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை வராது" என்று தெரிவித்தார்.
Summary
BJP and Amit Shah are the bosses of AIADMK, says Congress MP Jothimani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியையும் பிடிக்கலாம்
ஆகச் சிறந்த குழந்தைகளை உருவாக்குவோம்!
காங்கிரஸில் ஊழல்... வேட்பாளர் தேர்வில் முறைகேடு! ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு!

“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் தவறானது” - ஜோதிமணி எம்.பி.
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


