பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?

தவெக தலைவர் விஜய்யின் ஜாதகத்தை சுனாமி ஜாதகம் என வர்ணிக்கும் ஜோதிடர் ரத்தன் பண்டிட் யார்?

TVK leader VIjay

தவெக தலைவர் விஜய் - File photo

Published On :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும்கட்சியாக உருவெடுக்கும் என்று முந்தைய நாளே விஜய்யிடம் யாராவது சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், இதனை பல நாள்களுக்கு முன்பே கணித்துச் சொல்லியிருப்பவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்று கூறப்படுகிறது.

பொதுவாக அரசியல் வரலாறு என்பது பல அதிரடி மாற்றங்களையும் வீழ்ச்சிகளையும் இமாலய வெற்றிகளையும் பார்த்திருந்தாலும், இந்த மகத்தான வெற்றியின் பின்னணியில் ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்துள்ளது.

மே 4ஆம் தேதி வெளியான 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் வரைபடைத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது. இது வாக்களித்த வாக்காளர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒருவருக்கு மட்டும் ஆச்சரியமாக இருந்திருக்காது. காரணம். அவர்தான் இதனை முன் கணித்து சொன்னதே. ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், 40 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவார் என்று கணித்துச் சொல்லியிருந்தார்.

இவரது ஏராளமான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது விஜய்யின் ஜாதகம் ஒரு சுனாமி ஜாதகம் என்று வர்ணித்திருக்கிறார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான சற்று நேரத்திலேயே ரத்தன் பண்டிட், விஜய் இல்லத்துக்கு பூங்கொத்துகளுடன் வந்து சென்றிருந்தார். இவர்களது சந்திப்பின்போது விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ரத்தன் பண்டிட் தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

இவர் வெறும் ஜோதிடராக மட்டுமல்லாமல் பல சமூக ஊடகங்களில் தவெகவின் பேச்சாளர் போலவும் செயல்பட்டிருந்தார்.

இவர் ஜோதிடர் மட்டுமல்ல, விஜய்க்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும், இவர்கள் கல்லூரியில் படித்த சம கால நண்பர்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Who is this Radhan Pandit predicted Vijay's Himalayan victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.