தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், அனைத்து தவெகவினரையும் சென்னையில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், வரலாறுகளைக் கருத்தில் கொண்டு, தவெக எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னமும் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கோரும் நிலை தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னுடைய உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அனைவரையும் சென்னை வரவழைத்து ஒரே இடத்தில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக அல்லது அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது தொடர்பாக இன்று பனையூரில் தவெக தலைவர் விஜய் இல்லத்தில் கட்சியின் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Regarding the alleged plans to house the Tevaga members who won the election in Chennai..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ-க்கள் மாமல்லபுரம் சொகுசு விடுதியில் தங்கவைப்பு!

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா

திமுக கோட்டை தகர்கிறது! சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!
சென்னையில் விஜய் சாலைவலம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


