தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

தொகுதி மறுவரையறைக் குழு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு

News image

ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:53 pm IST

பாஜகவுக்கு தொகுதி மறுவரையறைக் குழு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பாதிக்கும். சிறந்த ஆட்சி வழங்கப்படும்போதிலும், இத்தகைய அணுகுமுறையால் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தி, கூட்டாட்சி முறையின் உணர்வைக் குலைக்கக் கூடும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், ஒருதலைபட்சமாகவோ அரசியல் உள்நோக்கத்துடனோ எடுக்கப்படக்கூடாது. மேலும், நடவடிக்கைகளுக்கு முன்னதாக மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல; அது நீதி, பங்களிப்பு, சமநிலையைப் பற்றியது.

பாகுபாடு காட்டப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமிழகம் மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாநில மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் கிளம்பும்.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின்கீழ் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படுவது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.

Summary

Delimitation Committee to be formed under a Supreme Court judge and the Chief Election Commissioner, who favour the BJP, is unfair, says Congress MP Jothimani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.