தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம்
தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரத்தில் அலுவலர்களை நீக்கியது குறித்து...

கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் ரத்தன் யு கேல்கர்
ENS

கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் ரத்தன் யு கேல்கர்
ENS
கேரளத்தில் தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரத்தில் இரண்டு தேர்தல் அலுவலர்களைப் பதவியிலிருந்து மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் ரத்தன் யு கேல்கர் சனிக்கிழமை (மார்ச் 28) நீக்கியுள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி, அரசியல் கட்சிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச் 19 ஆம் தேதியிட்ட கடிதத்துடன் தோ்தல் ஆணையம் அனுப்பிய எழுத்துபூா்வ சான்றில், ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாக கேரள பாஜகவின் முத்திரை இருந்தது. இந்தச் சான்றை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பகிா்ந்ததைத் தொடா்ந்து சா்ச்சை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ஒரு துணை தலைமை நிர்வாக அலுவலரும், ஒரு பிரிவு அலுவலரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேறு துறைகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கேரளத்தின் கூடுதல் தலைமைச் செயல் அலுவலர் பி.பி. நூஹ் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடிதங்களை அனுப்பியதாகக் கூறப்படுபவரான ஜெய்சல் பி அஜீஸ் என்ற அலுவலக உதவியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...