எல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது பாஜக!!

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதைப் பற்றி...

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:31 pm

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய பாஜக, மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிகளவில் யாரும் விறுவிறுப்பு காட்டாத நிலையில், நகர்ப் பகுதிகளில் 50 சதவிதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

மாநிலம் கடும் வெப்ப அலை வீசுவதால் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் மாநகராட்சிப் பகுதிகளில் 48.55 சதவிகிதம், நகராட்சிகளில் 58.12 சதவிகிதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 60.22 சதவிகிதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 61.08 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஏப்.28) காலை எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆளும் பாஜக முன்னிலை வகித்தது. ஒன்று இரண்டு இடங்கள் என்றில்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

அகமதாபாத்

அதன்படி, அஹமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 158 இடங்களில் பாஜகவும், 22 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.

பாஜகவின் கோட்டையான சூரத்தில்...

பாஜகவின் கோட்டையென கூறப்படும் சூரத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரேயொரு இடத்திலும் வெற்றி பெற்றன. முந்தைய தேர்தலில் வலுவாக இருந்த ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

72 இடங்களைக் கொண்ட ராஜ்கோட்டில் பாஜக 65 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

வதோதராவில் 76 இடங்களில் பாஜக 69 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி - 0.

பாவ்நகரில் 52 இடங்களில் பாஜக 43-லும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஒரேயொரு தொகுதியில் சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றார்.

கர்மசாத்-ஆனந்த் 52 தொகுதிகளில், பாஜக 43 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் வென்றன. ஒரு இடம் சுயேச்சை வேட்பாளருக்குச் சென்றது.

காந்திதாமில் 52 தொகுதிகளில், பாஜக 41 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களையும் கைப்பற்றின.

நாடியாட்டில் 52 தொகுதிகளில், பாஜக 51 இடங்களைக் கைப்பற்றி ஏறக்குறைய முழுமையான வெற்றியைப் பதிவுசெய்தது. காங்கிரஸுக்கு வெறும் 1 இடம் மட்டுமே கிடைத்தது. நவசாரியில் 52 தொகுதிகளில், பாஜக 50 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் வென்றன.

போர்பந்தர், மோர்பி ஆகியவற்றில் தலா 52 இடங்களில் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. சுரேந்திரநகரில் (52 இடங்கள்) பாஜக 51 இடங்களைக் கைப்பற்றியது, காங்கிரஸுக்கு வெறும் 1 இடம் மட்டுமே கிடைத்தது.

84 நகராட்சிகளில் (2,030 இடங்கள்), பாஜக 1,791 இடங்களையும், காங்கிரஸ் 414 இடங்களையும், மற்றவர்கள் 144 இடங்களையும் வென்றனர்.

34 மாவட்ட பஞ்சாயத்துகளில் 1,090 இடங்களில் பாஜக 568 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், மற்றவர்கள் 30 இடங்களையும் வென்றனர்.

260 தாலுகா பஞ்சாயத்துகளில் 5,234 இடங்களில் பாஜக 2,397 இடங்களையும், காங்கிரஸ் 591 இடங்களையும், மற்றவர்கள் 329 இடங்களையும் வென்றனர்.

Summary

The BJP recorded sweeping victories across Gujarat's municipal corporations, municipalities, district panchayats and taluka panchayats. The outcome reinforces its organisational reach in urban and rural local governance while Congress trails well behind.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.