சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி! எங்கே?

குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்படுவது தொடர்பாக...

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - ANI

Updated On :29 மார்ச் 2026, 3:08 am

கொல்கத்தாவில் ஆறு குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொல்கத்தாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலில், ஆறு வாக்குச்சாவடிகள் குடியிருப்பு வளாகங்களுக்குள் அமைக்கப்படும் என்றும், அதில் நான்கு - குடியிருப்பு வளாகங்கள் நகரின் வடக்குப் பகுதியிலும், மீதமுள்ள இரண்டு - தெற்குப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக் குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் மட்டுமே, அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும், திரிணமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி , கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேற்கு வங்கத் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Election Commission of India has stated that polling stations will be set up within six residential complexes in Kolkata.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.