மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்கம்: பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு!

News image

பாஜக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் - கோப்புப்படம் PTI

Updated On :24 மே 2026, 9:29 pm IST

கொல்கத்தா : மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், ஃபால்டா (144) சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை(மே 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஃபால்டா மறு தேர்தலில் 86.11 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவித்தன.

அங்கு வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேபாங்ஷு பாண்டா, தன்னை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சம்பு நாத் கர்மியைவிட 1,09,021 வாக்குகள் அதிகம் பெற்று பெருவெற்றி பெற்றார்.

ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேபாங்ஷு பாண்டா

ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேபாங்ஷு பாண்டா - PTI

இந்த வெற்றியின்மூலம், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்ந்தது. முன்னதாக, கடந்த மே 4-இல் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் 207-இல் வென்று ஆட்சியமைத்தது பாஜக. முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வீழ்த்திய அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வர் பதவியேற்றார்.

சுவேந்து அதிகாரி மொத்தம் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, நந்திகிராம் தொகுதியில் பெற்ற வெற்றியை அவர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Summary

Falta election results : BJP candidate Debangshu Panda on Sunday recorded a massive win with a margin of 1,09,021 votes against Communist Party of India (Marxist) candidate Sambhu Nath Kurmi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.