மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு

மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை(மே 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

News image

ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு - ANI

Updated On :21 மே 2026, 7:25 pm IST

கொல்கத்தா : மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை(மே 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், ஃபால்டா (144) சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃபால்டா மறு தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி, 86 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் முதல்கட்ட தரவுகள் மூலம் அறிய முடிகிறது. துல்லியமான வாக்குப்பதிவு விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்குப்பதிவு 86 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியிருக்கக்கூடும் என்று தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவித்தன.

Summary

Falta Assembly Constituency repolling; a voter turnout of 86.11 per cent was recorded, but the numbers are expected to rise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.