அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

மேற்கு வங்க மறுதேர்தல்: 1 மணி வரை 60% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் மறுதேர்தலில் 1 மணி வரை 60 சதவிகித வாக்குகள் பதிவானது குறித்து...

News image

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 2:54 pm IST

மேற்கு வங்கத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் நடைபெற்று வரும் மறுதேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி, 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்த்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஃபால்டா தொகுதியில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்ததால் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் மறுதேர்தலுக்கான தேதியை அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை முதல் ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிற்பகல் 1 மணி வரை 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்ததாகவும், எந்த இடத்திலிருந்தும் வன்முறைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த மறுவாக்குப்பதிவில் 1,21,300 ஆண்கள், 1,15,135 பெண்கள் மற்றும் ஒன்பது மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2.36 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the ongoing re-election in the Falta constituency of West Bengal, 60 percent of the votes have been recorded as of 1 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.