திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாஜக - காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நீடிக்கும் இழுபறி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக, காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி

News image

பாஜக | காங்கிரஸ் - பிரதிப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:55 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக, காங்கிரஸ் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்ப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளிலும் பிரசாரங்களிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜகவும் காங்கிரஸும் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தில்லியில் பியூஷ் கோயல் தலைமையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இறுதிப் பட்டியலுடன் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வரவிருப்பதாகவும், மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இன்று இரவு அல்லது நாளைக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பிலும் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தில்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுடன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் 85 விழுக்காடு தொகுதிகளில் வேட்பாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

எஞ்சிய 15% இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று காலையோ அல்லது நாளை காலையோ முழு வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.

தேசிய கட்சி என்பதால் ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவர்களிடம் இதே கேள்வியை கேட்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

TN Polls 2026: Stalemate Persists over BJP and Congress Candidate Lists!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.