சென்னைக்கு இன்று வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மறுத்து தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து, இங்கிருந்து புதுச்சேரி செல்லவிருக்கிறார்.
சென்னைக்கு இன்று பிற்பகல் 3.20 மணிக்கு வருகைதரும் பிரதமர் மோடி, இங்கிருந்து புதுச்சேரி சென்று, பிரசாரத்தை முடித்துவிட்டு, மீண்டும் மாலை 6.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
தொடந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, பாஜக நிர்வாகிகளுடனும் பிரதமர் மோடி நாளை (ஏப். 4) சந்திப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சியினர் சென்னைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது, அவர்களின் பிரசாரத்தைப் பாதிக்கும் என்பதால், கட்சி நிர்வாகிகளுடனான பிரதமரின் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசவிருப்பதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்திருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
Summary
PM Modi cancels BJP Executives meeting Chennai due to Election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது! தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி

மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


