25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு காங்கிரஸ் கைவிடுகிறது: பாஜக

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து...

Shehzad Poonawalla

ஷெஸாத் பூனாவாலா - படம் - ஏஎன்ஐ

Published On :9 மே 2026, 10:49 am IST

காங்கிரஸ் தங்களது கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவற்றைக் கைவிடுகிறது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தவெக தலைமையில் ஆட்சியமைக்க118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்தது.

மேலும், வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தலைவருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கைக்கு அருகே திமுக எம்.பி.க்களின் இருக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளதால் இருக்கைகளை மாற்றித்தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா, "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு முத்தலாக். காங்கிரஸ் தனது கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவற்றைக் கைவிடுகிறது" எனத் தெரிவித்தார்.

Summary

BJP National Spokesperson Shehzad Poonawalla has stated that the Congress uses its allies and then abandons them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.