இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?

விஜய் பதவியேற்பு எப்போது, ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image

தவெக தலைவர் விஜய் - File photo

Updated On :5 மே 2026, 3:46 pm IST

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் விஜய், கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை மூன்று நாள்களுக்கு சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அடிப்படையாக வைத்து விஜய் 7ஆம் தேதி வியாழக்கிழமை பதவியேற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சி அலுவலகத்தில் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை தவெக குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதற்கான ஒப்புதல் கடிதத்திலும் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, அனைத்து உறுப்பினர்களும் மூன்று நாள்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை தவெகவே பார்த்துக் கொள்ளும் என்று விஜய் கூறியிருந்ததால், இந்த மூன்று நாள்களுக்குள் பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனவே, ஸ்டாலின் பொறுப்பேற்ற அதே மே ஏழாம் தேதி விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்க ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜய் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்களை ஒரு சில தவெக உறுப்பினர்கள் உறுதி செய்திருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநரை நாளை சந்தித்து பதவியேற்க கோரிக்கை மனுவை விஜய் வழங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் தெரிவித்திருக்கும் நிலையில் மே 7ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.