தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்து வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், எடப்பாடி தொகுதி வேட்பாளர் பின் வாங்கியதால், குறைந்த கணக்கை, சுயேச்சை வேட்பாளரக்கு ஆதரவளித்து நேராக்கிவிட்டார் தவெக தலைவர் விஜய்.
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் 233 தொகுதிகளில் போட்டி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், தவெக முன்னாள் நிா்வாகியும், எடப்பாடி தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், 234 என்ற கணக்கு நேராகிவிட்டிருக்கிறது.
எடப்பாடி தொகுதி, அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாகவும், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் நட்சத்திர தொகுதியாகவும் உள்ளது. இங்கு தவெக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நிச்சயம் வாக்குகளைப் பிரிப்பார் என்றே கருதப்படுகிறது.
முன்பு, தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், தற்போது தவெகவினரின் முழு ஆதரவுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தன்னை ‘வெற்றி நிச்சயம்’ என வாழ்த்திய விஜய்யின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று புன்னகையுடன் கூறியபடி, கொளுத்தும் வெய்யில் என்று பார்க்காமல் பிரசாரத்தை தூள் கிளப்பி வருகிறாராம் அப்பகுதியில்.
இவர் விஜய்யின் ரசிகனாகவும், ரசிகா் மன்றத்திலும் இருந்தவர். தற்போது எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.
தவெக சார்பில் இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண் குமார், வேட்பு மனு பரிசீலினையின்போது மாயமானார். மேலும், அவரது வேட்பு மனு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தால் நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதால் தவெகவினர் கடும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில்தான், அந்தத் தொகுதியில் போட்டியிடும் விஜய் ரசிகர் ஒருவருக்கு, கட்சித் தலைமையின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இதனால், தவெக நேரடியாக போட்டியிடும் 233 தொகுதிகளும், ஆதரவுடன் போட்டியிடும் எடப்பாடி தொகுதி 234 ஆக இணைந்துள்ளது.
Summary
About TVK leader Vijay, who has straightened out the tally of 234 assembly constituencies..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் காலூன்றிய தவெக

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




