தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுகவை முன்னாள் அமைச்சர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பர்?
இன்று கிறுக்கு பிடித்தாற்போல பேய் மாதிரி அலைகிறார் பழனிசாமி. அங்குமிங்கும் அலைகிறார்.
விஜய் வீட்டின் கதவைத் தட்டினார். ஆனால், அவர் முடியாது என்று கூறி விட்டார்.
இவ்வளவு கீழ்நிலைக்கு இந்த இயக்கத்தை உதயகுமார் கடப்பாரையுடனும் பழனிசாமி மண்வெட்டியுடனும் வந்து, குழிதோண்டி புதைத்து விட்டனர்" என்று தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில், விஜய்யுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முற்பட்டதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Summary
DMK Leader O Panneerselvam says ADMK Leader Edappadi Palaniswami tried to form an alliance with TVK Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

