மகாராஷ்டிரம்: கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலியானார்கள்.  
மகாராஷ்டிரம்: கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலியானார்கள். 
மகாராஷ்டிர மாநிலத்தில் டெம்போ ஒன்றில் 35 பேர் நள்ளிரவு மணியளவில் புல்தானா மாவட்டத்தில் உள்ள சைலனி பாபா தர்காவுக்கு சென்றுவிட்டு நாசிக் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடையே டெம்போ வாகனம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சம்ருதி அதிவிரைவு சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கண்டெயினர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேடற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரமர் மோடி உள்ளிட்டோர் இரங்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com