இஸ்ரேலில் இருந்து 49 போ் தமிழகம் வருகை 

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 274  தாயகம் வந்துள்ளனா். அவர்களில் 49 தமிழா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 
இஸ்ரேலில் இருந்து 49 போ் தமிழகம் வருகை 
Published on
Updated on
1 min read


சென்னை: போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 274 பேர் தாயகம் வந்துள்ளனா். அவர்களில் 49 தமிழா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு 128 தமிழா்கள் இருப்பது அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புது தில்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புது தில்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மக்களவை உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். 

மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்ரேலில் இருந்து 110 பேர் இதுவரை தமிழகம் வந்துள்ளனர். இன்னும் 18 பேர் வரவேண்டியுள்ளது.  அவகளையும் மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடரும். 

இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 95 சதவிகிதம் பேர் மேற்படிப்புகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர். 

வெளிநாடு செல்லும் தமிழர்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையதளத்தை தொடங்க உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com