மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் மோடி: ராகுல் தாக்கு!

மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறையை விட இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரதமர் அதிக அக்கறை காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 
மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் மோடி: ராகுல் தாக்கு!

மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறையை விட இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரதமர் அதிக அக்கறை காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக மிசோரம் வந்தடைந்த ராகுல் சன்மாரி சந்திப்பிலிருந்து அணிவகுப்பைத் தொடங்கி சுமார் 4.5 கி.மீ தூரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். 

அதன்பின்னர் ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பேரணியில் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், 40 வேட்பாளர்கள் அடங்கிய தேர்தலில் 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் ராகுல்காந்தி பேசுகையில், 

பிரதமரும், இந்திய அரசும் இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் காட்டும் ஆர்வத்தை, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதளவும் அக்கறை காட்டாதது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. 

கடந்த ஜூன் மாதத்தில் ராகுல் மணிப்பூர் சென்றதையும், அங்கு தான் பார்த்ததை நம்ப முடியவில்லை என்றும் கூறினார். மேலும் மணிப்பூர் யோசனை பாஜக முற்றிலும் அழித்துவிட்டது. இப்போது அது ஒரு மாநிலம் அல்ல இரண்டு மாநிலங்கள். அதாவது குகி-மைதேயி ஆகிய இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். 

மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் சித்தரவதைச் செய்து கொல்லப்பட்டனர். ஆனால், அங்குப் பயணம் செய்வதை பிரதமர் முக்கியமாகக் கருதவில்லை. 

இரு சமூகத்தினரிடையே மே மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லாதது வெட்கப்படவேண்டியதொன்றாகும். 

மணிப்பூரில் நடந்த வன்முறை வெறும் பிரச்னையின் அறிகுறி. இந்தியா என்ற எண்ணம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், நாட்டு மக்கள் மீது அடக்குமுறை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். 

மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com