புது தில்லி: இந்திய தொழிலதிபர் அதானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாகச் செல்கிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, அரசின் அனைத்து துறைகளில் இருந்தும் அதானிக்கு பங்கு செல்கிறது. மத்திய அரசு அதானிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
அதானியின் நிலக்கரி இறக்குமதி விலையில் ஏற்பட்ட பணவீக்கத்தை சரி செய்யவே, சாமானிய மக்களின் மின்சாரச் செலவு அதிகரித்து வருகிறது என்றார்.
மேலும், இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி அதனை இந்தியாவில் இரண்டு மடங்கு விலைக்கு விற்கிறார் அதானி என்று கூறியிருக்கும் ராகுல், நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்வதாகவும், அதிக விலைக்கு அதனை இந்தியாவுக்கு விற்று ரூ.12,000 கோடியை பறித்ததாக ஊடகங்களில் வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி பேசினார் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


