

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.எஸ். அச்சுதானந்தன் தனது 100வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
வயோதிகம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக, அவர் பொது நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்துகொள்வதை அண்மைக்காலமாக தவிர்த்து வருகிறார்.
கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைத்தளத்தின் வாயிலாக அச்சுதானந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஆழப்புழை மாவட்டத்தில் உள்ள புன்னபுரா கிராமத்தில் பிறந்தவர் அச்சுதானந்தன். ஆரம்பப் பள்ளியுடன் படிப்புக்கு முழுக்குப் போட்ட இவர், ஆலப்புழையில் இயங்கி வந்த தொழிற்சங்கத்தால் ஈர்க்கப்பட்டார்.
1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு, அதிலிருந்து வெளியேறிய 32 பேரும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்) உருவானபோது அதன் நிறுவனத் தலைவா்களில் ஒருவராக வி.எஸ்.அச்சுதானந்தன் இருந்தாா். 2006-ஆம் ஆண்டு தனது 82-ஆவது வயதில் கேரள முதல்வராகப் பொறுப்பேற்றாா். இதன் மூலம் கேரளத்தில் மிக அதிக வயதில் முதல்வா் பதவியை ஏற்றவா் என்ற சாதனையையும் படைத்தாா்.
இதையும் படிக்க.. கணவர் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்துக் கொன்ற விஞ்ஞானி
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் நிா்வாக சீா்திருத்தக் குழு தலைவராக நியமிக்கப்பட்டாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பொறுப்பில் இருந்தாா்.
கேரளத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், 7 முறை பேரவை உறுப்பினராகவும் இருந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.