புது தில்லி: பிரதமா் மோடியை ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை எக்ஸ் வலைதளத்தில், ‘ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்தாா்’ எனப் பதிவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய மனோஜ் சின்ஹா, ‘முன்பைவிட ஜம்முவில் பாதுகாப்பு நிலை நன்கு முன்னேறியுள்ளது. பயங்கரவாதம் தனது இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது’ எனக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.