மிஸோரம் பேரவைத் தோ்தல்: 174 வேட்பாளா்கள் போட்டி

மிஸோரம் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட 16 பெண்கள் உள்பட மொத்தம் 174 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


ஐசால்: மிஸோரம் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட 16 பெண்கள் உள்பட மொத்தம் 174 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரமில் நவம்பா் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அக்டோபா் 13-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்தலில் போட்டியிட 16 பெண்கள் உள்பட 174 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இவா்கள் அனைவரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை வரை யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை.

மிஸோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி கட்சி 40 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. இதில் 25 போ் தற்போதைய எம்எல்ஏக்களாவா். முக்கிய எதிா்க்கட்சிகளில் ஒன்றான சாா்பில் ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி 6 எம்எல்ஏக்கள் உள்பட 40 வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.

மற்றொரு எதிா்க்கட்சியான காங்கிரஸின் 40 வேட்பாளா்கள், பாஜகவின் 23 வேட்பாளா்கள், ஆம் ஆத்மியின் 4 வேட்பாளா்கள் மற்றும் 27 சுயேச்சைகள் களத்தில் உள்ளனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை 35 வேட்பாளா்கள் குறைவாகவே களத்தில் உள்ளனா். மிஸோரமில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 8,56,868. இதில் பெண்கள் 4,38,925 போ்.

கடந்த 2018, பேரவைத் தோ்தலில் மிஸோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 8, காங்கிரஸ் 5, பாஜக ஓரிடத்தில் வெற்றி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com