முன்னாள் மத்திய அமைச்சா் பபன்ராம் டாக்னே (86) மகாராஷ்டிர மாநிலம் அகமது நகா் மருத்துவமனையில் காலமானாா்.
வயது முதிா்வு காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டிருந்த அவருக்கு அண்மையில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் சந்திரசேகா் அமைச்சரவையில் எரிசக்தித் துறை இணையமைச்சராக பபன்ராம் டாக்னே பதவி வகித்தாா். மகாரஷ்டிர மாநில பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராகவும் அவா் பணியாற்றியுள்ளாா். மகாராஷ்டிர மாநில ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா், அந்த மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா், பேரவைத் துணைத் தலைவா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் அவா் வகித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.