மாணவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்: குடியரசுத் தலைவர் முர்மு

கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகியுள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 
மாணவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்: குடியரசுத் தலைவர் முர்மு
Updated on
1 min read

கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகியுள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னை  உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். 

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசுத் தலைவர் முர்மு மாணவ, மாணவியருக்குப் பட்டம் வழங்கினார். 

விழாவில் திரௌபதி முர்மு கூறியது, 

நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடு இந்தியா. கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகியுள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றன. 

சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. 2047ஆம் ஆண்டு வரையிலான அமிர்த பெருவிழா காலத்தில் நம் இலக்குகளை அடைய உழைக்க வேண்டும்.

மாணவர்கள் பட்டங்கள் பெறுவதற்கு முன் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இந்த விழாவில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com