இத்தாலிக்கான புதிய இந்தியத் தூதராக வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாணி சர்ராஜு ராவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 1994-ஆம் ஆண்டுப் பிரிவு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவா், வெளியுறவு அமைச்கத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறாா்.
இத்தாலிக்கான இந்தியத் தூதராக தற்போது நீனா மல்ஹோத்ரா உள்ளாா். விரைவில் அப்பதவியை வாணி சர்ராஜு ராவ் ஏற்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.