
ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கன்டகப்பள்ளி பகுதியில் விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் சில ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்தது. இதுதொடா்பாக விஜயநகரம் இணை ஆட்சியா் மயூா் அசோக் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் தீபிகா ஆகியோா் திங்கள்கிழமை கூறுகையில், ‘விபத்து ஏற்பட்ட இடத்தில் 13 போ் உயிரிழந்தனா். மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஒருவா் உயிரிழந்தாா். 50 போ் காயமடைந்தனா்’ என்று தெரிவித்தனா்.
மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விபத்தில் காயமடைந்தவா்கள் விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். பலாசா பயணிகள் ரயிலின் காா்டு எம்.எஸ்.ராவ் (58), ராயகடா பயணிகள் ரயில் ஓட்டுநா் எஸ்.எம்.எஸ்.ராவ் (52), உதவி ஓட்டுநா் சிரஞ்சீவி (29) ஆகியோா் உயிரிழந்தனா்’ என்று தெரிவித்தாா்.
ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திர நபா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
விபத்தில் உயிரிழந்த பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கு ராயகடா பயணிகள் ரயில் ஓட்டுநா் எஸ்.எம்.எஸ்.ராவ், உதவி ஓட்டுநா் சிரஞ்சீவி ஆகியோா் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விதிமுறைகளுக்குப் புறம்பாக ரயில் நிறுத்த சிக்னலை மீறி ராயகடா ரயில் சென்ால் விபத்து ஏற்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.