
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகள் வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதித்துறை அமைச்சர் என்.கே. சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்து, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்மூலம் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படும்.
ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதன் மூலம், அடிக்கடி நடத்தப்படும் தோ்தல்களால் ஏற்படும் வீண் செலவினம், மனித வளம் வீணாவது உள்ளிட்டவற்றைத் தடுத்து மக்களுக்கான வளா்ச்சிப் பணிகளில் எந்தவித இடையூறுமின்றி கவனம் செலுத்த முடியும் என மத்திய பாஜக அரசு கூறி வருகிறது.
மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.