அடுக்குமாடி குடியிருப்புக்குள் கஞ்சா தோட்டம் வைத்த 3 இளைஞர்கள் பிடிபட்டது எப்படி?

அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளை சோதனை செய்த காவல்துறையினருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கப் போகிறது என்று தெரிந்திருக்காது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளை சோதனை செய்த காவல்துறையினருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கப் போகிறது என்று தெரிந்திருக்காது.

வழக்கமாக நடைபெறும் சோதனை போல இல்லாமல், அங்கே 96 பேரல்களில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததைப் பார்த்து காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அகமதாபாத் அருகே போபால் பகுதியில் 3 படுக்கை அறை கொண்ட வீட்டில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து, ஹைட்ராலிக் முறையில், மண் இன்றி, ரசாயனம் மூலம் கஞ்சா பயிர்களை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடயவியல் துறையினருடன் காவல்துறையினர்  சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் 15வது மாடியில், மூன்று வீடுகளை சோதனையிட்டனர். இதில், ரவி பிரகாஷ், விரேன் பிரபாத், ரித்திகா என்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கஞ்சா வளர்த்து வந்ததும், அவர்களில் ஒருவரது சகோதரர், சென்னையிலிருந்து ரசாயனங்களை வாங்கிக் கொண்டு வந்து தந்திருப்பதும் இவர்கள் மூவரும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கஞ்சா செடிகளை பயிரிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசுமை இல்லம்(Green House) முறையில் முதலில் கஞ்சா செடிகளை பயிரிட்டு, பிறகு ரசாயன முறையில் அவற்றை வளர வைத்திருக்கிறார்கள். இதற்கு, அந்த அறை முழுவதும் குறிப்பிட்ட வெப்பநிலையில் இருப்பதற்கான தொழில்நுட்பத்தையும் கையாண்டிருக்கிறார்கள் குற்றவாளிகள்.

அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் இருந்து 96 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4.87 லட்சம் மதிப்புள்ள பொருள்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சாதாரண கஞ்சாவுடன் ஒப்பிடும்போது, இந்த ரசாயண கஞ்சா அதிக வீரியம் கொண்டது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வகையான கஞ்சாவை வெளிநாடுகளில் சில இடங்களில் பயன்படுத்துவதாகவும், தடயவியல் நிபுணர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக என்று சர்கேஜ் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிஜே சாவ்தா கூறினார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் பதிவாவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரு குற்றவாளி வேளாண்மைத் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதில் மற்றொருவர், கஞ்சா பயிருக்குத் தேவையான வெப்பநிலையைத் தக்க வைக்கும் தொழில்நுட்பம் அறிந்தவராக இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த சோதனையின் போது 200 கஞ்சா செடி தொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com