
கோப்புப்படம்
அசாம் மாநிலம் டின்சுகியாவில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.
டின்சுகியா மாவட்டத்தின் தும்டுமாவில் உள்ள சந்தையிலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் டாடா மேஜிக் வாகனத்தில் பயணித்தபோது, வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படிக்க: சந்திரயான் - 3 லேண்டரின் இருப்பிடம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!
இந்த கோர விபத்தில் சிக்சி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...