ஜி-20 மாநாடு: அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

தேசிய தலைநகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரையிலும் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தில்லி  மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
ஜி-20 மாநாடு: அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

தேசிய தலைநகரில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, செப்டம்பர் 08 முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரையிலும் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 04 மணிக்கு தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:

2023ஆம் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவைகள் மூன்று நாள்களுக்கு அதாவது செப்டம்பர் 08 முதல் 10 வரை மூன்று நாள்களுக்கு அனைத்து வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 04 மணி முதல் அதன் சேவையைத் தொடங்கும்.

அனைத்து வழித்தடங்களிலும் காலை 06 மணி வரை 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன் பிறகு மெட்ரோ ரயில்கள் நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் தேதிகளில் பயணிகளை ஏற்றுவதற்கும் அதே வேளையில் இறக்குவதற்காகவும் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம் மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தைத் தவிர அனைத்து மெட்ரோ நிலையங்களும் இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். வி.வி.ஐ.பி பிரதிநிதிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் முயற்சியில் சில ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறலை குறுகிய காலத்திற்கு ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்படலாம் என்றும் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம், படேல் சவுக் மற்றும் ராம கிருஷ்ணா ஆசிரமம் மார்க் மெட்ரோ நிலையங்களைத் தவிர, அனைத்து நிலையங்களிலும் பார்க்கிங் வசதி கிடைக்கும்.

மெட்ரோ சேவைகளை சீராக இயக்க பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிலைய ஊழியர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com