

உத்தரப் பிரதேசத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கு இந்தாண்டு 1,476 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு 960 மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 1,476 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஒன்றரை மடங்கு அதிகமாகும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இலவச பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பங்களை பெறப்பட்டது. அதற்கான நுழைவுத் தேர்வு செப்.26, 27 தேதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணல்கள் நடைபெறும். சிவில் சர்வீசஸ் விண்ணப்பதாரர்களுக்கான ஐந்தாவது அமர்வு அக்டோபரில் தொடங்க உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், யோகி ஆதித்யநாத் அரசின் முயற்சியால் பயிற்சி பெற்ற 13 பேர், உ.பி.யில் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியர்கள் முதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் வரை உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 விண்ணப்பதாரர்கள் பல்வேறு துணைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.