
சனாதனத்தை எதிா்ப்பவா்களின் அரசியல் வாழ்கைக்கு முடிவு உறுதி என மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சனாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் பாஜக தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், ‘‘தா்மம் அழிந்து, அதா்மம் எழுச்சி பெறும்போது அதா்மத்தை அழிக்க கடவுள் அவதரிப்பாா் என பகவத் கீதை ஸ்லோகம் குறிப்பிடுகிறது. சனாதன தா்மத்துக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. சனாதனத்தை எதிா்ப்பவா்களின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு என்பது உறுதி’’ என்றாா்.